யார் காவல்?
உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்
காதல் முறிந்த பெண்ணுக்கு
வாழ்வில் யார் காவல்? அவள்
மாலை அணிகின்ற உயிருக்கு
உலகில் யார் காவல்?
யார் காவல்? யார் காவல்? (உடலுக்கு)
சட்டம் என்பது வெளிக் காவல்
தர்மமென்றால் அது மனக் காவல்
இரண்டும் போன பின் எது காவல்?
எது காவல்? யார் காவல்? (உடலுக்கு)
மழலைப் பருவத்தில் தாய் காவல்
வளர்ந்துவிட்டால் தன் மனம் காவல்
இளமையிலே ஒரு துணை காவல்
இறந்துவிட்டால் பின் யார் காவல்?
யார் காவல்? (உடலுக்கு)
1 comment:
ஏன் சார்? கொஞ்சம் பாடலுக்கான இணைப்பையும் கொடுத்தால் எங்கள மாதிரி ஆளுங்க கேட்க வசதியாக இருக்குமே?
பி.பி.எஸ் குரல் கேட்க கேட்கத் தெவிட்டாத குரல்.
Post a Comment