ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் - அவன்
ஏனோ மரம்போல் வளர்ந்துவிட்டான் (ஏதோ)
எதிலும் அச்சம், எதிலும் ஐயம்
எடுத்ததற்கெல்லாம் வாடுகிறான் - தன்
இயற்கை அறிவை மடமை எனும்
பனித்திரையாலே மூடுகிறான் (ஏதோ)
பெண்ணே தெய்வம், அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான் - பெண்
பேதைகளென்றும் பீடைகளென்றும்
மறுநாள் அவனே ஏசுகிறான் (ஏதோ)
நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றி எனும் குணம் நிறைந்திருக்கும்,
நரியாய் அவனே உருவெடுத்தாலும்
தந்திரமாவது தெரிந்திருக்கும்;
காக்கைக் குலமாய் அவதரித்தாலும்
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்,
காற்றாய் நெருப்பாய் நீராயிருந்தால்
கடுகளவாவது பயனிருக்கும்;
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
அறிந்தே மனிதன் பிறந்துவிட்டான் - அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய்
அவனே வெளியில் விட்டுவிட்டான் (ஏதோ)
1 comment:
அருமையான பாடல்!
இது கவியரசர் பாடலாக இருக்கலாம் அதுவும்; நாத்தீகராக இருந்தபோது எழுதியதாக இருக்கவேண்டும்.மிக மென்மையான குரல்; அழகான இனிய இசை
Post a Comment