சிரிப்பு பாதி அழுகை பாதி
சிரிப்பு பாதி அழுகை பாதி
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
நெருப்பு பாதி நீரும் பாதி
நிறைந்ததல்லவோ உலக நீதி (சிரிப்பு)
பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்
கொடை வெயிலில் நிழலே தெய்வம் (சிரிப்பு)
உடைத்த கல்லில் ஒன்று தெய்வம்
ஒன்று கோவில் ஒன்று வாசல்
இறைவன் படைப்பில் பேதம் இல்லை
இடத்தைப் பொறுத்து எதுவும் மாறும் (சிரிப்பு)
2 comments:
அண்ணா!
இப்பாடல்களை எழுதியது;இசையமைத்தது; படம் போன்ற விபரமும் தரவும்
அண்ணா!
இப்பாடல்களை எழுதியது;இசையமைத்தது; படம் போன்ற விபரமும் தரவும்
Post a Comment